கேரள கோயில் உள்கட்டமைப்பு மற்றும் விலங்குகள் நலனுக்காக , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி ₹18 கோடிவழங்கப்படும் என அறிவித்தார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 8 மணியளவில்வரலாற்றுசிறப்புமிக்கதளிபரம்பிலுள்ளராஜராஜேஸ்வரம் கோவிலுக்கு விஜயம் செய்த ஆனந்த் அம்பானி, பொன்னும்கூடம்,பட்டம், தாளி, நெய்யமுறுது உள்ளிட்ட பாரம்பரிய பிரசாதங்களை வழங்கி அஸ்வமேதநமஸ்காரம் செய்தார்.
ராஜராஜேஸ்வரம்மற்றும்குருவாயூர்கோயில்களுக்கு₹6கோடிநன்கொடைகள்,ராஜராஜேஸ்வரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு கோபுரத்தை புனரமைக்க₹12 கோடி ஒதுக்கீடு, அத்துடன் குருவாயூரில் உள்ள கோயில் யானைகளின்பராமரிப்புக்கான புதிய முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும் என ஏ.என்.ஐ செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.அனந்த் அம்பானி தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் வந்திருந்தார், மேலும் கோயில்அதிகாரிகளால் பாரம்பரிய மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.
அனந்த் அம்பானி குருவாயூர்கோயிலுக்குச் சென்று, அங்கு குருவாயூரப்பன் பெருமானை வழிபட்டதோடு, கோயில்அறக்கட்டளைக்கு ₹3 கோடியையும் நன்கொடையாக வழங்கினார்.வந்தாரா திட்டத்தின் மூலம் விலங்குகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தனதுஅர்ப்பணிப்பிற்கு இணங்க, குருவாயூரில் உள்ள கோயில் யானைகளின் நலனுக்கானமுயற்சிகளை ஆதரிக்கும் தனது விருப்பத்தையும் அனந்த் அம்பானி வெளிப்படுத்தினார்.கோயில் மரபுகளுடன் தொடர்புடைய யானைகளுக்கு மனிதாபிமான, கண்ணியமானமற்றும் அறிவியல் பூர்வமான பராமரிப்பை உறுதி செய்வதற்காக, ஒரு பிரத்யேகயானை மருத்துவமனை, சங்கிலி இல்லாத தங்குமிடம் மற்றும் நவீன உள்கட்டமைப்புஆகியவற்றை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
குருவாயூரில், தேவஸ்வம் தலைவர் ஏ.வி. கோபிநாத் மற்றும் பிற அதிகாரிகள் அவரை,வரவேற்று பாரம்பரிய நினைவுப் பரிசுகளும் பிரசாதமும்வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, இந்தியாவின் ஆன்மீக மரபுகள் வெறும்வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அவை நம்பிக்கை, சமூக உணர்வு, கருணைமற்றும் இயற்கையுடனான ,நமது ஆழமான பிணைப்பை வளர்க்கும் உயிருள்ளநிறுவனங்களாகும்.
வருங்கால சந்ததியினருக்காக இந்தப் புனிதமானபாரம்பரியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்றார்.அவர் மேலும் கூறுகையில், “இந்த முன்னெடுப்புகள் மூலமாகவும், வந்தாராவில்நாங்கள் ஆற்றும் பணிகள் மூலமாகவும், எங்கள் மரபுகளின் இன்றியமையாதஅங்கமான விலங்குகள் மிகுந்த கண்ணியம், கருணை மற்றும் அறிவியல் பூர்வமானகவனத்துடன் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, பக்தர்களின்அனுபவத்தையும் மேம்படுத்தி, பணிவுடன் சேவை செய்ய நாங்கள் முயல்கிறோம்.
கோயில் உள்கட்டமைப்பை ஆதரிப்பதன் மூலமும், புனிதமான பாரம்பரியக்கட்டமைப்புகளை மீட்டெடுக்க வழிவகுப்பதன் மூலமும், பக்தர்களின் அனுபவத்தைமேம்படுத்துவதன் மூலமும், கோயில் விலங்குகளின் நலனை முன்னேற்றுவதன்மூலமும், இந்த முன்னெடுப்புகள் இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தின்அடித்தளமாக விளங்கும் வாழும் மரபுகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
0
Leave a Reply